செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பெண் கல்விக்காக மரதன் ஓடும் பிரியாமணி

பெண் கல்விக்காக மரதன் ஓடும் பிரியாமணி

1 minutes read

பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்க இருக்கும் மரதன் போட்டியில் கலந்து கொண்டு நடிகை பிரியாமணி ஓட இருக்கிறார்.

சுகாதாரம், மாதவிலக்கு ஆகியவற்றால் மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால், பள்ளியில் இருங்கள் என்ற பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்கும் மரதன் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். வரும் மே மதம் 19ம் தேதியில் நடக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு பெண் கல்விக்காக நிதி திராட்ட இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலான பள்ளிகளில் சரியான டாய்லெட் வசதி இல்லாதது, மாதவிலக்கு சுகாதார சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது.

ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் பணியாற்றுவது என் கடமை. அதனால், இந்த மரதன் போட்டியில் கலந்து கொண்டு என்னால் ஆன சிறிய நிதியுதவி திரட்ட முன்வந்துள்ளேன். இது போன்று பலரும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.