செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உலகம் முழுதும் திரையிடப்பட்ட தர்பார் இணையத்தில் வெளியானது.

உலகம் முழுதும் திரையிடப்பட்ட தர்பார் இணையத்தில் வெளியானது.

0 minutes read

‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியானது.தமிழகத்தில் சிறப்பு காட்சியைக் காண தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பல தியேட்டர்களில் காலை 5 மணிக்கே ‘தர்பார்’ திரையிடப்பட்டன. ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இதையடுத்து ‘தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையும் மீறி ‘தர்பார்’ திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய ந‌‌ஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததும் பயனில்லை .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.