செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

1 minutes read

நடிகர் முகேன் ராவ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் பல்ராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் ‘ திரைப்படத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாண்டானியோ டெர்ஸியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். குற்ற புலனாய்வு வகைமையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஸ்கொயர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”நிறம் என்பது எளிதான தலைப்பு அல்ல. மக்களின் மனங்களும்… சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மையையும்… உணர்த்தும் குறியீடு. உண்மை சம்பவங்களை தழுவி கதை எழுதப்பட்டிருக்கிறது. கிரைம் இன்வெஸ்டிகேட்டட் திரில்லராக ரசிகர்கள் எதிர்பார்க்காத சுவாரசியமான அம்சங்களும் இதில் இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.