மூன்று சர்வதேச விருதுகளை அள்ளிய ‘சினம்கொள்’ திரைப்படம்

ஈழப் பிரச்சினையை பேசும் சினம்கொள் திரைப்படம் மூன்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் நோர்வே திரைப்பட விழா தமிழக சினிமா நட்சத்திரங்களின் மத்தியில் மாத்திரமின்றி உலகளவில் பிரசித்தமானது.

2020ஆம் ஆண்டுக்கான நோர்வே திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் மேமாதம் வரையில் இடம்பெறவுள்ளது. இதில் விருதுகளை பெறும் திரைப்படங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் சினம்கொள் திரைப்படம் மாத்திரம் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சினம்கொள் திரைப்படம் வென்றுள்ளது. அத்துடன் 2019ஆம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான விருது சினம்கொள் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்பிற்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டின் சிறந்த கதாநாயகனுக்கான விருதை சினம்கொள் திரைப்படத்தில் நாயகனாக நடித்த, அரவிந்தன் பெறுகின்றார். இதேவேளை, முள்ளிவாய்க்கால் யுத்த அனுபவங்கள் குறித்து எடுக்கப்பட்ட பொய்யா விளக்கு படம், சிறந்த ஆவண கதைப் படத்திற்கான விருதை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்