செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கொரோனா தொடர்பில் பொய் தகவல்; ரஜினியின் வீடியோவை அதிரடியாக நீக்கிய டுவிட்டர்

கொரோனா தொடர்பில் பொய் தகவல்; ரஜினியின் வீடியோவை அதிரடியாக நீக்கிய டுவிட்டர்

1 minutes read

கொரோனா தொடர்பில் தவறான தகவலை பரப்பியதாக, நடிகர்ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை டுவிட்டர் இணையத்தளம் அதிரடியாக நீக்கியுள்ளது.

நாளையதினம் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் 14 மணி நேரம் வைரஸ் பரவுவதைத் தடுத்து விட்டால் அதன் பின்னர் அது பரவாது என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். இது வழக்கமாக வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஒரு பொய்யான தகவல். இதை ரஜினிகாந்த் எப்படி சொல்லலாம்? அப்படிப்பார்த்தால் சீனா போன்ற நாடுகளில் நீண்ட காலமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருந்தனரே எதற்காக என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.

இதுதொடர்பாக டுவிட்டர் இணையத் தளத்திற்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இது உலகளாவிய, முக்கிய, பிரச்சினை என்பதால் தவறான தகவல் பரப்புவதை தடுப்பதற்காக ரஜினிகாந்த் வீடியோவை டுவிட்டர் இணையதளம் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

அதில், இந்த வீடியோ டுவிட்டர் தளத்தில் விதிமுறைகளை மீறியதால் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.