Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா காக்க காக்க 2 வில் மீண்டும் திரையில் இணையும் கணவன் மனைவி.

காக்க காக்க 2 வில் மீண்டும் திரையில் இணையும் கணவன் மனைவி.

1 minutes read

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ‘கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன் வந்தால் நானும் சூர்யாவும் நிச்சயம் நடிப்போம் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More