Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அஜித்தின் பெயரை கெடுக்கின்றனர்-கோபத்தின் உச்சத்தில்……

அஜித்தின் பெயரை கெடுக்கின்றனர்-கோபத்தின் உச்சத்தில்……

1 minutes read

பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இருப்புத்திரை படத்திலும் நடித்துள்ளார்.

தீவிர அஜித் ரசிகையான அலிஷா அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிரபலங்கள் குறித்தும் பைக் ரேஸிங் குறித்தும் பதிவிட்டுவார்.

மேலும் நடிகர் அஜித்தும் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் National Human Rights Anti Crime And Anti Corruption Bureau என்ற அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் இணையத்தில் பதிவிட்டு இருந்தார், இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் வதந்தியும் கிளப்பியுள்ளனர்.

இந்த பதவியை பெற்ற பின் இவர் நடிகர் அஜித்தை சந்தித்து, இந்த பதவி கிடைக்க நீங்கள் தான் காரணம் என்றும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியதாவும் என பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “இதுபோல் அவர் எப்படி பேசலாம், என்னை பற்றி வதந்தி கிளப்பியது மட்டுமில்லாமல் அஜித் சார் போன்ற மிக பெரிய ஸ்டார்களின் பெயரையும் கெடுகிறார்” என பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More