Thursday, October 22, 2020

இதையும் படிங்க

மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை

மாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது...

புத்தம் புது காலை | திரைவிமர்சனம்

நடிகர்காளிதாஸ் ஜெயராம்நடிகைகல்யாணி பிரியதர்ஷன்இயக்குனர்சுதா கோங்கரா பிரசாத்இசைஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, சதீஷ் ரகுநாதன்ஓளிப்பதிவுபி.சி.ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜீவ் மேனன், செல்வகுமார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

அதிரடி நாயகி திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான...

உலக சினிமா!!!

உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில்...

காதல் திருமணம் செய்யும் அதர்வா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமாகி இருக்கும் நடிகர் அதர்வா காதல் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமுத்திரகனியுடன் ஆக்‌ஷனில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது சமுத்திரகனியுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க இருக்கிறார். காலா, விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...

ஆசிரியர்

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி

‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

‘மகாகவி காளிதாஸ்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாலும் பழமும்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ போன்ற படங்கள் இவரின் நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப்படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ‘எம்.ஜி.ஆர்’, ‘சிவாஜி’ மற்றும் ‘ஜெமினிகணேசன்’ போன்ற ஜாம்பவான்களுடன், தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டமும், தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’ என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜனவரி 07, 1938

பிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை 

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

சரோஜாதேவி அவர்கள், 1938  ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சரோஜாதேவி அவர்கள், பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது, பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகரும், பட அதிபருமான ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவி பாடலைக் கேட்ட அவர், ‘இந்தப் பெண் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார்.

அப்பொழுது அவருக்கு, ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக அறிமும் செய்தார்.

1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்பட்டார்.

தமிழ் திரைப்படத்துறையில் சரோஜாதேவியின் பயணம்

கன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இருந்தாலும், தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமாகும். இதன் பின், 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது.

இதனைத் தொடர்ந்து, ‘வாழவைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1958), ‘நாடோடி மன்னன்’ (1958), ‘சபாஷ் மீனா’ (1958), ‘தேடி வந்த செல்வம்’ (1958), ‘பாகப்பிரிவினை’ (1959), ‘கல்யாண பரிசு’ (1959), ‘வாழவைத்த தெய்வம்’ (1959), ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960), ‘இரும்பு திரை’ (1960), ‘பார்த்திபன் கனவு’ (1960), ‘மணப்பந்தல்’ (1960), ‘பாலும் பழமும்’ (1961), ‘பனித்திரை’ (1961), ‘திருடாதே’ (1961), ‘குடும்பத்தலைவன்’ (1962), ‘பாசம்’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘இருவர் உள்ளம்’ (1963), ‘பெரிய இடத்துப் பெண்’ (1963), ‘பணத் தோட்டம்’ (1963), ‘தர்மம் தலைக்காக்கும்’ (1963), ‘நீதிக்குப் பின் பாசம்’ (1963), ‘படகோட்டி’ (1964), ‘தெய்வத்தாய்’ (1964), ‘புதிய பறவை’ (1964), ‘என் கடமை’ (1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘நான் ஆணையிட்டால்’ (1966), ‘நாடோடி’ (1966), ‘பறக்கும் பாவை’ (1966), ‘அன்பே வா’ (1966), ‘குல விளக்கு’ (1969), ‘தேனும் பாலும்’ (1971), ‘தாய்மேல் ஆணை’ (1988), ‘தர்ம தேவன்’ (1989), ‘ஒன்ஸ் மோர்’ (1997), ‘ஆதவன்’ (2009), ‘இளங்கதிர் செல்வன்’ (2010).

தனிப்பட்ட வாழ்க்கை

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.

விருதுகளும், மரியாதைகளும்

1965 – கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.

1969 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

1980 – கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.

1989 – கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.

1992 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.

1997 – சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.

1997 – தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.

2001 – ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.

2003 – ‘தினகரன் சாதனையாளர்’ விருது.

2006 – பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.

2007 – ரோட்டரி ‘சிவாஜி’ விருது.

2007 – ‘என்.டி.ஆர்’ விருது.

2008 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.

2009 – நாட்டிய ‘கலாதர்’ விருது.

2009 – கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.

2010 – தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது.

திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், சினிமாவில் தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உறவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியவர். நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை நடிப்பில் வெளிபடுத்தி ‘அபிநய சரஸ்வதி’ எனப் பெயர் பெற்றவர். குறிப்பாக சொல்லப்போனால், சரோஜாதேவி அவர்கள், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்!

நன்றி : itstamil.com

இதையும் படிங்க

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா...

கங்கனா மீது தேச துரோக வழக்கு!

மத மோதலை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த்...

நடிகைகளை கிண்டலடிப்பதா? நடிகர் சங்கத்துக்கு ரேவதி, பத்மப்பிரியா கேள்வி!

மலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடவேளை பாபுவின் கருத்துகள் குறித்து சங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று கேட்டு நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இடவேளை...

நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக...

மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை

சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...

மிஸ் யூ | பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரபல நடிகை

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல நடிகை ஒருவர் வாழ்த்து கூறி மிஸ் யூ என்று பதிவு செய்திருக்கிறார். கன்னட திரையுலகில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உணர்ச்சிகள்

உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

நடையில் வந்த பிரமை | சிறுகதை | முருகபூபதி

. மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

துயர் பகிர்வு