செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன?

விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன?

1 minutes read

விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2016-ல் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை.

எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர். நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.