Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட மோஷன் போஸ்டர் வெளியீடு

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட மோஷன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

‘புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இதில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சுனில் வர்மா, நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இடம்பெறும் முக்கிய நடிகர்களின் தோற்றம் மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற எளிய விழாவில் பங்குபற்றிய படத்தின் நாயகன் விஷால் பேசுகையில்,

”தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் புதிய கட்டுமானத்தின் பணிகள் இறுதிக்கட்ட நிலையில் இருக்கிறது. விரைவில் இந்த நடிகர் சங்கம் தொடங்கப்பட்டவுடன், இதற்கு மூலகாரணமாக திகழ்ந்த கெப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More