Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகையாக அறிமுகமாகும் சாரா மேனன்

நடிகையாக அறிமுகமாகும் சாரா மேனன்

0 minutes read

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜுவ் மேனனின் மகளான சாரா மேனன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இதில் நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் வாரிசான சாரா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எல் எல் பி எனும் பட நிறுவனம் சார்பில் பி பாப்பி நீடு வழங்க பி. வி. எஸ். என். பிரசாத் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வசந்த் ரவியின் மூன்று வெவ்வேறு பாவனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More