செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாதனை படைத்து வரும் ‘ரெட் சாண்டல்’ பட டீஸர்

சாதனை படைத்து வரும் ‘ரெட் சாண்டல்’ பட டீஸர்

1 minutes read

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான வெற்றி நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘ரெட் சாண்டல்’ எனும் திரைப்படத்தின் டீசர், பாராட்டைப் பெற்று, சாதனை படைத்து வருகிறது.

அறிமுக இயக்குநர் குரு ராமானுஜம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ரெட் சாண்டல்’. இதில் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தியா மயூரி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ‘கே ஜி எஃப்’ ராமச்சந்திர ராஜு, எம். எஸ். பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், ‘கபாலி’ விஸ்வந்த், வினோத் சாகர், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரா பகுதியில் பிரத்யேகமாக வளரும் செம்மரத்தை வெட்டி, சட்ட விரோதமாக கடத்துவதை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெ. என். சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெ. பார்த்தசாரதி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அண்மையில் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்.

செம்மர கடத்தல் தொடர்பான காட்சிகளும், இதில் வட சென்னையை சேர்ந்த குத்துச்சண்டை வீரரான வெற்றி செம்மர கடத்தலில் ஈடுபடுவதும், இது தவறு.. சட்டவிரோதமான செயல் என்றதும் அதிலிருந்து தன்னுடைய நண்பர்களை காப்பாற்ற போராடுவதும் இடம்பெற்று இருப்பதால், எக்சன் என்டர்டெய்னராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் செம்மர கடத்தலை மையப்படுத்தி கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழிலும் வெளியாகி வசூல் சாதனையை படைத்தது என்பதும், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.