Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஹிப் ஹொப் ஆதி தமிழா நடிக்கும் ‘வீரன்’ பட பாடல் வெளியீடு

ஹிப் ஹொப் ஆதி தமிழா நடிக்கும் ‘வீரன்’ பட பாடல் வெளியீடு

1 minutes read

ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்து வரும் ‘வீரன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெறும் ‘தண்டர்காரன்…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘மரகத நாணயம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. ஆர். கே சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘வீரன்’. இதில் ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆதிரா ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், முனிஸ்காந்த், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் ஆதி தமிழா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘கோவக்காரன் சண்டக்காரன் கருப்பசாமி பெத்த பேரன். ‘ எனத்தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, இசையமைப்பாளர்களான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஹிப் ஹொப் ஆதி தமிழா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் போல் ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் வழக்கமான துள்ளலிசைக்கான பாடல் வடிவில் இருப்பதால், இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் கவனத்தை கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More