Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

1 minutes read

நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பம்பர்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘குடி குடி தூத்துக்குடி குடி..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘பம்பர்’. இதில் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஜி. பி. முத்து, தங்கதுரை, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேதா பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். தியாகராஜா மற்றும் டி. ஆனந்த ஜோதி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘குடி குடி தூத்துக்குடி குடி தாமிரபரணி விளையாடும் ஊரடி…’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலுடன் பாடலுக்கான காணொளியும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பிரபல பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். றாப் மற்றும் துள்ளலிசையுடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More