செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

நடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலசாமி’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு பட்டிருக்கிறது.

‘தண்டாயுதபாணி’, ‘நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சரவண ஷக்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலசாமி’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ‘குட்டி புலி’ சரவண ஷக்தி, வினோதினி வைத்தியநாதன், மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா, போஸ் வெங்கட் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரியான எஸ். ஆர். ஜாங்கிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘வைட் ஆங்கிள்’ ரவி சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ஜீ ஸ்டார்’ மகாலிங்கம் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிக் புரொடக்ஷன்ஸ் ஏனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியுட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எதிர் வரும் 21 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருப்பதால், ‘குலசாமி’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.