Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய ‘நயன்தாரா 75’

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய ‘நயன்தாரா 75’

1 minutes read

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிக்கும் பெயரிடப்படாத அவரது 75ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இவருடன் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், நடிகர் ஜெய், கார்த்திக் குமார், பூர்ணிமா ரவி, கே. எஸ். ரவிக்குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின கிங்ஸ்லீ, குமாரி சச்சு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணாவிற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பு தொடங்கும் முன் ஆசியும், வாழ்த்தும் தெரிவித்தார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More