Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இலங்கையில் திரையிடப்படும் ஆஸியில் உருவான “பொய்மான்”

இலங்கையில் திரையிடப்படும் ஆஸியில் உருவான “பொய்மான்”

1 minutes read
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
இந்திய சினிமாக்களுக்கு ஈடினையற்ற புலம்பெயர் கலைஞர்களின் படைப்பில் அவுஸ்திரேலியாவில் உருவான “பொய்மான்” திரைப்படம் தற்போது இலங்கையில் திரையிடப்படுகிறது. அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவான “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாகும்.
கங்காரு தேச தமிழ் சினிமா படைப்பாற்றலில் இத்திரைப்படம் ஓர் மைல்கல்லாக தடம் பதித்தது. அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய “பொய்மான்” திரைப்படத்தில் ஜனார்தன், கவிஜா, ஜெயமோகன், ஷர்மினி நடித்துள்ளனர். ஷோபனம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில்
புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் இத்திரைப்பட இயக்குனாராவார்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஒரு கப்புசினோ காதல் மற்றும் பூமராங் போன்ற பாராட்டப்பட்ட குறும்படங்களையும் இயக்கிய டாக்டர் ஜே ஜெயமோகன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் ஜெயமோகனின் இரண்டு குறும்படங்களும் உலகளவில் 50,000க்கும் அதிகமான பார்வைகளுடன் பலத்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.
பொய் மான் திரைப்படத்தின் எடிட்டிங்கை செந்தில்குமார் ஆர் மற்றும் ஹரிஷ் செய்துள்ளனர். கலை இயக்கம் பணியை ஷாமினின் சி ஆற்றியுள்ளனர்.இத்திரைஇசை பாடல்களின் வரிகளை பாரதியார், குவேந்திரன், ஜெயமோகன், ஆதி எழுதியுள்ளனர். பொய்மான் படத்தின் இசையை சாரு ராம், ஆதி, குரு பி ஆகியோர் மெருகூட்டியுள்ளனர்.
அத்துடன் பொய்மான் பட பாடல்களை கலைமாமணி பூஷணி கல்யாணராமன், கிரே , ஆர்.பி ஷ்ரவன் (சூப்பர் சிங்கர்), ஆதி ஆகிய பாடகர்கள் பாடியுள்ளனர். அவுஸ்திரேலிய தயாரிப்பான “பொய்மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இவ்வருடம் ஜனவரி மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த இளங் கலைஞர்களை உள்ளடக்கிய முழு நீள திரைப்படமான பொய்மான், இந்திய திரைப்படங்களைப் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களை இணைத்து இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More