செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2’ இணையத் தொடருக்கான பாடல் வெளியீடு

நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2’ இணையத் தொடருக்கான பாடல் வெளியீடு

1 minutes read

திரைப்படங்களைப் போலவே தற்போது இணைய தொடர்களிலும் பாடல்கள் இடம்பெறுகிறது. அந்த வரிசையில் முன்னணி நட்சத்திர நடிகர் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2’  இணையத் தொடரில் இடம் பிடித்துள்ள ‘தெய்வ கோட்டிங்கு..’ எனும் பாடலும்,  பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 ‘ இணையத் தொடரில் சசிகுமார், அபர்ணாதாஸ், அனகா மருதோரா, யஷ்வந்த், ரேவதி சர்மா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ப்ரைம் விடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி முதல் எதிர்வரும் உலகம் முழுவதும் பிரைம் விடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘வதந்தி சீசன் 2’ இணைய தொடரில் இடம் பிடித்திருக்கும் ‘அட ஊல டாவு உழப்புற சீனு..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற பின்னணியில் காதலர்களின் சந்திப்பின் போது நிகழும் கெமிஸ்ட்ரியை இந்தப் பாடல் இயல்பாக காட்சிப்படுத்தி இருப்பதால் டிஜிட்டல் தள ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.