Sunday, June 26, 2022

இதையும் படிங்க

கவிதையை வாழ்த்தாக்கிய கீர்த்தி சுரேஷ்

விஜய், கீர்த்தி சுரேஷ், vijay, keerthy sureshநடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் வைரல் பதிவு..

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த...

காதல் கணவருடன் தேனிலவு சென்ற நயன்தாரா..

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்ட பிறகு நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்....

தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்தது 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்...

சாய்பல்லவியை பாராட்டிய பா.இரஞ்சித்..

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில்...

பெனால்டியைத் தவறவிட்ட ஜாவா லேனுக்கு ஏமாற்றம்

ஜாவா லேன் கழகத்துக்கும் சோண்டர்ஸ் கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான சம்பயின்ஸ் லீக் கால்பந்தாட்டப்...

ஆசிரியர்

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டங்களாகச் சரியும் உண்மைகள்!

உலக சினிமா
பிரான்சின் புதிய அலை: பகுதி \ 2
வரலாறு மறுமலர்ச்சி யுகம்\ 23

தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema  எனும் இதழைத் துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின்… இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்கத் தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிமிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம்.

அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன.. ஆனாலும் எரிக் ரோமர், கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழுக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்… திரைப்பட இயக்குனர்களைப் பேட்டி காண்பது… திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அளவில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையைப் போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்றவாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.

முதன்முதலாக 1953ல் த்ரூபோ எழுதிய “A Certain Tendency of the French Cinema” எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார். அக்கட்டுரை எதிர்பாராதவிதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. இக்கட்டுரைக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல், எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்… இதழில் இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆக்ரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சுப் பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாகச் சாடினர்.

விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம். சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாகத் தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைக்கோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்தனர்.

உலகசினிமாக்களை தலைகீழாகப் புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், விக்டர் ஸ்ட்ரோஜம், பஸ்டர் கீட்டன், சார்லி சாப்ளின், எரிக் வான் ஸ்ட்ரோஹிம் போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக், ஜான் போர்ட், ஹாவர்ட் ஹாக்ஸ், ஆர்சன் வெல்ஸ், ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச், ப்ரிட்ஸ் லாங் முர்னோ.

இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலை மட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர். மற்றவர்கள் கதை சொல்லிகள். அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர். ஆனால் இவர்கள் மட்டும் சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகனையும் கடந்து அழைத்துச் சென்றவர்கள் என அறிக்கை விட்டனர் .

எத்தனை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர். அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களைப் பிடிப்பது. இதுதான். ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராகச் சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை.

ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயக்குனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அதன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாகப் பிரிவிலும். கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்புப் பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாகத் துறைக்குள் நுழைந்தனர்.

சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாகத் தங்களது கைப்பணத்தைப் போட்டு படம் எடுக்கத் துவங்கினர். அக்காலத்தில் அரசாங்கம் குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கிப் படம் எடுத்தனர். ஒருவருடைய படங்களில் மற்றவர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர், மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படமாக முதலில் எடுக்கத் துவங்கினார்.

ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அதற்கு தேவையான மீத பணத்துக்காக அதே அணைக்கட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.., இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கச்செய்து அவரது பணத்தின் மூலம் த்ரூபோ குறும்படமெடுக்கத் துவங்கினார்.

முதல் திரைப்படம் Les Mistons. தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்கத் துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தைத் தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையைப் பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாகவும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறையத் துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளைத் திறந்து வழிவிட்டாற் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீசத் துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை

அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது (And God Created Woman)  (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம். தொடர்ந்து மெல்வில், லூயி மால், சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன.

இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்களின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth  எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூவேவ் – புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது. இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959). எனும் படம் வெளியானது.

பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அதனால் திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்றிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய அμகுமுறை கண்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தைப் பார்த்தவர்கள் அதிர்ந்தனர். சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்தனர். இது உண்மையைப் பேசுகிறது.

இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர். விழாவுக்கு வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார். இத்தனைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதே கேன்ஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்துப் பெருமை தேடிக்கொண்டது… உலகசினிமா அரங்குகளில் எழுதியது போல் படமெடுத்து நிரூபித்துக்காட்டிய இளைஞனைப் பற்றிய தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அμக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட தன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார் த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் கோதார்த் அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்கத் துவங்கினர்.

கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்தனைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்படம்தான்… ஆனாலும் காமிரா உயிரோட்டமாக அசைந்தது. படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதைத் தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்.

(புத்தகம் பேசுது செப்டம்பர் 2010 இதழில் வெளியான கட்டுரை)

நன்றி : கீற்று இணையம்

இதையும் படிங்க

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? விளக்கம் அளித்த ஓட்டோ..

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு...

ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்..

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக...

வைரலாகும் தனுஷின் “தாய் கிழவி” பாடல்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு...

தேவா என்ற தேனிசையின் ஹார்மோனியம்

ஒரு பக்கம் இசைஞானி. இன்னொரு பக்கம் இசைப்புயல். இடையே ஒரு தென்றலின் லாவகத்தோடு.... வருகிறது தேனிசைத் தென்றல். "விரலோ...

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

தொடர்புச் செய்திகள்

சினிமா 2017 ஒரு பார்வை | இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2

ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்  பாகுபலி 2 2017 ஏப்ரல்...

‘நான் ஏழாவது பாசுண்ணே’ | செந்தில்

கவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள். சினிமா...

வாழ்வில் கலந்த தமிழ் சினிமா பற்றி அறியாத சில தகவல்கள்

எமது அன்றாட வாழ்வில் கலந்த சினிமா பற்றி அரிய தகவல்கள் பற்றிக் காண்போம். முதல் தமிழ்த் திரைப்படம்1916 இல்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் உருவான 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான இளையராஜா, மணிரத்னம் இவர்கள் இரண்டு பேருக்குமே ஜுன் 2ம் தேதி தான் பிறந்தநாள்!

எரிநட்சத்திரம் | சிறுகதை | ஐ. கிருத்திகா

அடர்ந்திருந்த பந்தலில் பசு வெண்ணை உருண்டைகளாய்  மல்லிகை மொக்குகள். செழித்த மொக்குகளைப் பறித்து மாளவில்லை கோதைக்கு. கொல்லையில் நின்றிருந்த வாழை...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.

துயர் பகிர்வு