Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகிசு கிசு கல்யாணராமன் பிரபு தேவாவின் புது திருமணம் | உறுதி செய்த ராஜூசுந்தரம்

கல்யாணராமன் பிரபு தேவாவின் புது திருமணம் | உறுதி செய்த ராஜூசுந்தரம்

1 minutes read
Prabhu Deva Marriage: The Affair That Ended It All

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

1994 இல் இந்து படத்தின் மூலமாக நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபு தேவா. அதற்கு முன்பு பல படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். 90 களில் பிரபல நடிகராகவும் நடன இயக்குநராகவும் புகழ் பெற்றிருந்தார். 2004 இல் எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பிரபு தேவா, 2016 இல் நடித்த தேவி படம் வெற்றியடைந்த பிறகு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

2005 முதல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடந்த வருட இறுதியில் இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3 வது முறையாக இணைந்துள்ளார்கள்.

1995 இல் ரமலதாவைத் திருமணம் செய்தார் பிரபு தேவா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். 2008 இல் ஒரு மகன் உடல்நலக் குறைவால் இறந்து போனார். 2011 இல் பிரபு தேவாவும் ரமலதாவும் விவகாரத்து பெற்றார்கள். பிறகு, நடிகை நயன்தாராவைக் காதலித்தார் பிரபு தேவா. எனினும் சில வருடங்களில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து போனார்கள்.

இந்நிலையில் பிகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் செய்துள்ளார் 47 வயது பிரபு தேவா. ஊரடங்குக் காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபு தேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம், பிரபு தேவாவுக்குத் திருமணம் ஆனது உண்மைதான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More