Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி | செய்முறை

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி | செய்முறை

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  நெய் – 3 டீஸ்பூன்
  •  டால்டா – 3 டீஸ்பூன்
  •  உப்பு – தேவையான அளவு
  •  எண்ணெய் – 1/4 கப்,
  •  ஏலக்காய் – 2,
  •  தயிர் – 1 கப்,
  •  எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
  •  கிராம்பு – 2,
  •  பெரிய வெங்காயம் – 2,
  •  தக்காளி – 2,
  •  பட்டை – சிறிது,
  •  இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  •  சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
  •  மட்டன் – 1/2 கிலோ,
  •  மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,

உணவு செய்முறை : தலப்பா கட்டு மட்டன் பிரியாணி

  • Step 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • Step 2.பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .
  • Step 3.வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
  • Step 4..தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More