Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் இலங்கை டெவில்ட் சிக்கன் | செய்முறை

இலங்கை டெவில்ட் சிக்கன் | செய்முறை

2 minutes read

உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  சிக்கன் – அரைக் கிலோ
  •  குடை மிளகாய் – 2 (சதுரமாக நறுக்கியது)
  •  வெங்காயம் – 2
  •  இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
  •  தக்காளி – 2
  •  சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு மேசைக்கரண்டி
  •  தக்காளி கெச்சப் – ஒரு மேசைக்கரண்டி
  •  மிளகாய்த் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  •  மிளகுத் தூள் – அரை மேசைக்கரண்டி
  •  மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  •  உப்பு – தேவையான அளவு
  •  எண்ணெய் – தேவையான அளவு

உணவு செய்முறை : டெவில்ட் சிக்கன்

  • Step 1.முதலில் சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • Step 2.இப்பொழுது வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். பின்னர் குடை மிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவேண்டும்.
  • Step 3.பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவேண்டும். பிறகு பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.
  • Step 4.பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  • Step 5.வெங்காயம் வதங்கி இஞ்சி, பூண்டு விழுது வாசம் தணிந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
  • Step 6.இப்பொழுது தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து கிளறவேண்டும்.
  • Step 7.பின்பு அதில் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More