Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மாங்காய் வற்றல் ரசம் | செய்முறை

மாங்காய் வற்றல் ரசம் | செய்முறை

1 minutes read

தேவையானவை:

துவரம்பருப்பு – கால் கப்

மாங்காய் வற்றல் – 6

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

புளி – நெல்லிக்காய் அளவு

மிளகு – சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

காய்ந்த மிளகாய் – 3

கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு – சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.

நன்றி : பெட்டகம் இணையதளம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More