Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  பாசிப்பருப்பு…………1கப்
  •  தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
  •  திராட்சை…….15
  •  தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
  •  ஏலக்காய்……..6
  •  முந்திரி…………….10
  •  பால்……………1 டம்ளர்
  •  வெல்லம்………….11/4 கப்
  •  கேரட்……….1 மேசைக்கரண்டி

உணவு செய்முறை : பாசிப்பருப்பு பாயாசம்

  • Step 1.முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  • Step 2.மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும்.பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும்.அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
  • Step 3.பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.பின்பு பரிமாறவும்.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More