Saturday, April 10, 2021

இதையும் படிங்க

இளநீர் புட்டிங் எப்படி செய்வது ?

தேவையானவைதேங்காயுடன் கூடிய இளநீர் - 2,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,முந்திரி பருப்பு- தேவையான அளவு,அவல் - இரண்டு கைப்பிடி. செய்முறைஇளநீர்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி கூட்டு!

தேவையான பொருட்கள்:முள்ளங்கி - கால் கிலோவெங்காயம் - 1 பெரியதுதக்காளி - 2கறிவேப்பிலை - 1 கொத்துமஞ்சள்தூள் - சிறிதளவுதனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்பஉப்பு - தேவைக்குசிறு பருப்பு -...

சத்து நிறைந்த காய்கறி சூப்!

தேவையானவை:கேரட் - 2,பீன்ஸ் - 6,பச்சைப்பட்டாணி - 20,முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 1,கொத்தமல்லி - தேவையான அளவு,பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்,சீரகத்தூள் -...

இயற்கை மோர் எப்படி செய்வது?

தேவையானவைதேங்காய்ப்பால் -½ கப்,எலுமிச்சை - 1,உப்பு -தேவையான அளவு,கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,இஞ்சி - சிறிதளவு. செய்முறைதேங்காய்ப்பாலுடன் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை,...

எலும்புகளை பலப்படுத்தும் பிரண்டை சூப்!

தேவையான பொருட்கள்பிரண்டைத் தண்டு - 1 கட்டுசின்ன வெங்காயம் - 10 எண்ணம்வெள்ளைப் பூண்டு - 3 பற்கள் (பெரியது)சீரகம் - 1 ஸ்பூன்மிளகு - 2 ஸ்பூன்கொத்தமல்லி இலை...

ஆந்திரா புளியோதரை!

தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,புளி - சிறிய எலுமிச்சை அளவு,பச்சை மிளகாய் - 2,கறிவேப்பிலை - சிறிது,மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு,வெல்லத்...

ஆசிரியர்

ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு | செய்முறை

உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா?

சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

அதோடு இந்த குழம்பை நீங்கள் சப்பாத்தி, தோசையுடனும் சாப்பிடலாம். உங்களுக்கு முட்டை ஆம்லெட் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே முட்டை ஆம்லெட் குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 4

* உப்பு – தேவையான அளவு

* மிளகுத் தூள் – தேவையான அளவு குழம்பிற்கு…

* வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

* மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – தேவையான அளவு

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – ஒரு டீஸ்பூன்

* பட்டை – ஒரு துண்டு

* ஏலக்காய் – 3

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து, அப்படியே ரோல் போன்று சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பிறகு ஜாரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை தூவி, பச்சை வாசனை போக வேக வைக்கவும்.

* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, எண்ணெய் பிரிய கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் அதில் ஆம்லெட் துண்டுகளைப் போட்டு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆட்லெட் குழம்பு தயார்.

நன்றி : tamil.boldsky.com

இதையும் படிங்க

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

சூப்பரான தர்பூசணி ரசம்!

என்னென்ன தேவை?தர்பூசணி - 200 கிராம்,புளிக்கரைசல் - 1/2 கப்,உப்பு - தேவைக்கு,மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,இஞ்சி...

கேரட் பாயசம் எப்படி செய்வது!

தேவையான பொருட்கள்கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி,விழுதாக அரைத்துக் கொள்ளவும்),வெல்லம் – கால் கப்,தண்ணீர் – தேவையான அளவு,தேங்காய்ப்பால் – ஒரு கப்,ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்உப்பு...

சுலபமாக செய்யலாம் இறால் பிறைட் ரைஸ்!

தேவையான பொருட்கள் :இறால் - கால் கிலோபாசுமதி அரிசி - 4 கப்வெங்காயம் - 4முட்டை - 4பூண்டு - 1 டீஸ்பூன்கேரட் - 1வெங்காயத்தாள் - சிறிதளவுமீன் சாஸ்...

கார வெண்டைக்காய்!

தேவையானவை :வெண்டைக்காய் - 10,மிளகுத் தூள் - 2 ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு. செய்முறைவெண்டைக்காய் முழுவதும் கழுவி காம்புகளை நறுக்கி நீள வாக்கில் பொறுமையாக...

புதுமையான பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..!

பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. புதுமையான பெயர்களும், அவற்றின் வினோதமான வடிவங்களும் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள்...

தொடர்புச் செய்திகள்

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

கொத்து புட்டு | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கொத்து புட்டு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்து புட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கூந்தலுக்கு தயிர் செய்யும் அற்புதமான நன்மைகள்!

அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தலை பெறுவது பலருக்கும் கனவாகவே இருக்கலாம். ஆனால் இது உண்மையில் கனவில்லை. நீங்கள் மெனக்கெட்டால் எளிதாக இதை பெற முடியும்.

சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம்

பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..!

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட...

துயர் பகிர்வு