Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ரவா கேக்..!

ரவா கேக்..!

2 minutes read

தேவையானவை:
ரவை – 1 கப்
சர்க்கரை- 3/4 கப்
தயிர் – 1/2 கப்
உருகிய வெண்ணெய்- 1/4 கப்
பால் – 1/2 கப்
டூட்டி ஃப்ரூட்டி – 1/4 கப்
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
மைதா – 1/4 கப் மைதா + 1 தேக்கரண்டி
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை மற்றும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் கப் அளவு உருகிய வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள ரவை மற்றும் சர்க்கரை கலவையை சேர்த்து கலக்கவும். அதனுடன் கால் கப் பால் சேர்த்து கலக்கவும். இப்பொழுது இப்போது மூடி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஒரு சிறிய பௌலில் கால் கப் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து கலக்கி தனியே வைக்கவும்.

30 நிமிடங்களுக்குப் பிறகு தயாராக உள்ள மாவில் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், கால் கப் மைதா, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இப்பொழுது கால் கப் பால் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். மாவு கெட்டியாக இல்லாமல் இலகுவாக கலக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு ஆறு இன்ச் அளவு பேன் அல்லது அடி தட்டையான பாத்திரத்தில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

தயாராக வைத்துள்ள மாவை அதனுடன் சேர்க்கவும். அடுப்பில் ஒரு அகலமான பேன் வைத்து, அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் சூடாக்கவும். பின்னர் தயாராக வைத்துள்ள மாவை அதனுள் வைத்து மூடி வைத்து 50 முதல் 60 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைக்கவும். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கேகே வெளியே எடுத்து ஆற வைத்து பரிமாறவும். சுவையான ரவா கேக் தயார்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More