Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வெஜிடபிள் ஊத்தாப்பம்!

வெஜிடபிள் ஊத்தாப்பம்!

1 minutes read

வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
தோசை மாவு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி – 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் – 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.
  • பிறகு அதன் மேல் சிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.
  • பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.

இந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி மிகவும் அற்புதமாக இருக்கும்.

நன்றி -மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More