செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா!

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா!

1 minutes read

தேவையான பொருட்கள்
பன்னீர் – 250 கிராம்
தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
ஆலில் ஆயில் – – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூம்
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
குடை மிளகாய் – 2 சதுரமாக நறுக்கியது
வெங்காயம் – 1 சதுரமாக நறுக்கியது
தக்காளி – 1 சதுரமாக நறுக்கியது
மூங்கில் குச்சி – தேவையான அளவு

செய்முறை

பன்னீரை சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை சதுர வடிவில் நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆலில் ஆயில் (Olive oil), எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு கடலை மாவு சேர்த்து, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை 1/2 மணி நேரம் மூடி ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக குத்தி தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பன்னீர் குத்தி வைத்த குச்சிகளை அடுக்கி வைத்து சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா தயார்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.