ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
நன்றி | மாலை மலர்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW