பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் தான் side dish ஆக செய்வார்கள். சாதாரணமாக வாழைக்காய் பொரியல் சிலருக்கே பிடிக்கும்.
ஆனால், மகாராஷ்டிரா ஸ்டைல் வாழைக்காய் ப்ரை செய்தால், அது மீன் ப்ரை போல வீட்டில் அனைவருக்கும் பிடித்து, போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சோம்புத் தூள் – ½ டீஸ்பூன்
சீரகத் தூள் – ½ டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – ½ டீஸ்பூன்
மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சாட் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வாழைக்காய் – 1
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காய் தோலை நீக்கி, பஜ்ஜி சீவுவது போல நீளமான, தட்டையான துண்டுகளாக வெட்டவும்.
ஒரு கிண்ணத்தில் ரவை, மாவுகள், மசாலா தூள்கள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
துண்டுகளை பரப்பி வைத்து, மேலே இந்த மசாலா கலவையை பூசி, 5 நிமிடம் ஊறவிடவும்.
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, மீன் ப்ரை செய்வது போல, வாழைக்காய் துண்டுகளை பொன்னிறமாக பொரிக்கவும்.
✨ குருமுறுப்பான, சுவையான மகாராஷ்டிரா ஸ்டைல் வாழைக்காய் வறுவல் ரெடி!