இலண்டன் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அதிக வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளலாம் என்று வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘பிரிட்டிஷ் வானிலை சேவை’யைச் சேர்ந்த ஜிம் டேல்ஸ் கூறுகையில், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாம் அதிக வெப்பத்தைக் கண்டிருந்தாலும் – ஜூன் மாதத்தில் இலண்டனில் 30C தாண்டி ஆறு நாட்கள் வெப்பநிலை இருந்தது, இது சராசரியை விட அதிகமாகும்.
ஜூலை மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தலைநகரின் வெப்பமான காலமாக இருப்பதால் “30C க்கும் அதிகமான வெப்பநிலை” தொடர வாய்ப்பு உள்ளது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு!
இலண்டன் ஒரு ‘நகர்ப்புற வெப்ப தீவு’ என்பதால் இங்கிலாந்து வரைபடத்தில் அதிக வெப்பநிலையை கொண்டுள்ளது.
ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் வெப்பநிலை 30C ஐத் தாண்டி, ஜூலை 15 ஆம் திகதி 31C ஐ எட்டும் என்று இணைய வானிலை முன்னறிவிப்பாளரான நெட்வெதர் கணித்துள்ளது.
இங்கிலாந்தின் தலைநகர் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள அண்மைய வெப்ப அலை நிலைமைகள் ‘சந்தேகத்திற்கு இடமின்றி புவி வெப்பமடைதல்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.