செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகள்

குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகள்

3 minutes read

குழந்தை வளர்ச்சி
குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.

குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்
2 மாதங்கள் – புன்சிரிப்பு,லேசான சிரிப்பு
4 மாதங்கள் – கழுத்து நிற்பது,கை,கால்களை சிறித்ளவு அசைக்கும்
8 மாதங்கள் – எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
12 மாதங்கள் – எழுந்து நிற்பது
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.
குழந்தையிடம் ஏதாவது பொருள்,கைகளை கொடுத்தால் அவை தன்னுடைய உறுப்பால் ஒன்று என நினைத்துக் கொள்ளும்.

6 முதல் 12 வாரங்கள்
குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
குழந்தை திடீரென அழுகும்

3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.

9 மாதங்கள்
கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.

12 மாதங்கள்
குழந்தை எழுந்து நிற்கும்
தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.

18 மாதங்கள்
யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை,கப்பை பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
ஓரிரு வார்த்தைகளை பேசப்பழகிவிடும்.
குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.

2 வருடங்கள்
கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.

3 வருடங்கள்
தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கும்.

4 வருடங்கள்
மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
உறவினர்களிதம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்

5 வருடங்கள்
துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.

மூலம்: என் டி டி வி-யின் மருத்துவர் குழு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.