புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் முல்தானி மிட்டி அழகுக்கு அழகு சேர்க்கும்

முல்தானி மிட்டி அழகுக்கு அழகு சேர்க்கும்

1 minutes read

முல்தானி மிட்டியுடன், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, ‘பேஸ் பெக்’குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறம் மற்றும் அழகை பாதுகாக்கலாம்

முகத்தில் வரும் கரும் புள்ளி, வெண் புள்ளி போன்ற பிரச்சினைகளுக்கு, முல்தானி மிட்டியுடன் வேப்ப இலையின் விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும், முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளும், வெண் புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்

கோடையில் முல்தானி மிட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு, முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மிட்டியுடன், சந்தனத்தை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்

* முகத்தில் முல்தானி மிட்டியை தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீரில் கழுவினால், முகம் அழகாகவும், பளபளப்பாக இருக்கும்.

முகத்தில் பருக்கள் மற்றும் அதிகமான எண்ணெய் சுரப்பு பிரச்சினை உள்ளோர் பன்னீருடன், முல்தானி மிட்டியை குழைத்து, ஒரு சிறிய, ‘ப்ரஷ்’ பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப் பிரச்சினைகள் சரியாகும்.

நன்றி மித்ரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.