செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பெண் குயின் | கேசுதன்

பெண் குயின் | கேசுதன்

0 minutes read

மலர்மாலை சூடும் கழுத்ததனில்
கருடன் விஷம்தனை அணிந்த
காட்டாறு-அவள்
சாவுக்கும் கனவு காணும்
கற்பனையோ
செருக்குடன் தனியாக மிரட்டும்
மறவர் அணி
பூ சூடும் வயதில் வாகைசூடும் வரம் பெற்ற
மங்கையவள்
வரலாறு காணாத வம்சம் என
பேரெடுக்கும் மோகம்-அவள்
தாயாகும் வயதில் பேயாக நின்று
கொலைக்களம் புகுந்த
வீரமங்கையவள்
கலைகளும் கற்று படைக்களம்
புகுந்த போராளி-அவள்
பட்டதும் பாடம் புகட்டும் திமிர்பிடித்த
வேங்கையவள் கண்கள்
தூண்டும் துப்பாக்கியும் வெறிகொண்டு வீசும்
தோட்டாகளை
வெறிபிடித்த வீரம் பேசும்-அவள்
தொட்ட துப்பாக்கி
பெண் என்ற குயின் புகழ் பாடும்
அவன் அரசில்.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.