செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கொடகே தேசிய இலக்கிய விருது பெற்ற கலாநிதி கந்தையா ஸ்ரீகணேக்ஷன்

கொடகே தேசிய இலக்கிய விருது பெற்ற கலாநிதி கந்தையா ஸ்ரீகணேக்ஷன்

0 minutes read

யாழ். பல்கலைக்கழகம் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில் சிரேஸ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் கலாநிதி ஸ்ரீகணேக்ஷன் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளைத் தந்தவர்.

ஏற்கனவே அவர் நாடகங்களின் தொகுப்பு நூல் ஒன்றுக்கும், விமர்சன நூல் ஒன்றுக்கும், மொழி பெயர்ப்பு நூல் ஒன்றுக்கும் அரச மற்றும் மாகாண இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.

இந்தியாவில் சார்க் இலக்கிய மாநாட்டில் பலமுறை கலந்து இலங்கை இலக்கியம் பற்றி பல ஆய்வு கட்டுரைகளைப் படித்தவர். அது மட்டுமல்லாது ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை சார் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட “பிறேக்கிங் பரியேர்ஸ்” BREAKING BARRIERS என்ற நூலுக்கு கொடகே நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கொடகே தேசிய இலக்கிய விருது கிடைத்துள்ளது.

கடந்த 2.3.2022 அன்று நடைபெற்ற கொடகே விருது விழாவிலே அதனை அவர் பெற்றுக் கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.