Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மூழ்கி | முல்லையின் ஹர்வி

மூழ்கி | முல்லையின் ஹர்வி

1 minutes read

மயமான உலகத்தில்
மாயமான வித்தைக்
காண்பியங்கள்…
விரி திரை மோகம் போய் இன்று
கைத்திரை நுட்பமாய்
காண்கிறோம் தொ (ல்)லை பேசிகளை…..

தொழிநுட்பம் காண தொட்டில் குழந்தைக்கு தாலாட்டும்,
பள்ளிப் பாலகர்க்கு பாடப் புத்தமாய் மாறிவிட்டன – அல்லல் பேசிகள்

உண்ணும் போதும், உடுக்கும் போதும், உண்டதைக் கழிக்கும் போதெல்லாம் உற்ற நண்பனாக உருவாகி விட்டது

பிழைப்புக்கு நடிக்கும் சில வேடிக்கை நாடகங்களை தவறாமல் பார்ப்பதற்கு
அழும் குழந்தையின் கையில் போன் தந்து உல்லாசம் காணும் வீட்டு மேதாதைகளின் அதிகரிப்பு

அழுதால் கிடைக்கும் மிட்டாய் களைப்போல்
பட்டனை தட்ட ஓடும் காட்சிகள்
கலர் கலராய் வருவதால்,
கிணற்றுத் தவளைப் போல
மூழ்கிக் கொள்கிறார்கள் சிறார்கள்

பசியில்லை தூக்கமில்லை
படிப்பிலே நாட்டமில்லை
வாட்ஸப் குழுக்களிலே
வந்திறங்கும் பல பகட்டு படங்கள்
ஓடி ஒழிந்து வேர்த்து வழிந்து நிற்க
போனிலே படித்து என் பிள்ளை களைப்பு என்று பெருமிதம் வேறு…

இரவு பகலற்ற பாவனை விளைவினால்…….
குருடும் செவிடும் கண்ணோய்
முள்ளந்தண்டு வலி என்று வைத்தியரை தேடிச் செல்லும்
நாள் எல்லாம் எண்ணில் அடங்காமல்

ஓடி ஒழிந்து, துரத்திப்புடித்து கிட்டிப்புல் பம்பரம் கப்பல் கோடு என்று உடல் வளம் செழிக்க எத்தனையோ-இன்றெல்லாம்
இருக்கைக்கு சுமையாக்கும்
புரொயிலர் கோழிகளைப் போல
பிறிபயர் பப்ஜி கன்டிகிறஸ் சினைப்பர் கார்ரேஸ்…

வளரும் எதிர் காலம்
வலுவிழந்து போகிறது….
தொந்தரவாய் இருப்பவற்றை தவிர்ப்பதெல்லாம் நன்று

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More