September 22, 2023 4:09 am

இனி உன் முடிவு | ஒரு பக்கக் கதை | வெ.ராம்குமார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘நிர்மல்! நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்ட சொல்லியாச்சு. என் மேல இருக்குற நம்பிக்கையில ஓகே சொல்லிட்டார். நீயும் உங்க வீட்டுல சொல்லியே ஆகணும்!’ – சுஜாதா இப்படிச் சொன்னதும் நிர்மலுக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும் சுஜா…படிப்பு, வேலைனு எந்த விஷயத்திலும் எங்கப்பா கிழிச்ச கோட்டை நான் தாண்டினதே இல்ல. சொன்னா என்ன ஆகுமோ, அதான் பயமா இருக்கு!’

‘சரியான பயந்தாங்கொள்ளிடா நீ… இன்னும் ரெண்டு நாள்ல உன் அப்பாகிட்டே பேசு. இல்லைன்னா, என்னை மறந்துடு!’ – தீர்மானமாகச் சொல்லி விட்டாள் சுஜாதா.

‘உன் கல்யாண விஷயத்துல நீ என்னடா முடிவு பண்ணியிருக்கே?’ – அப்பாவே இப்படிக் கேட்க, ‘அது… அது வந்துப்பா… உ… உங்க இஷ்டம்’ என்றான் நிர்மல்.

‘ஏன் முகமெல்லாம் வேர்த்துக் கொட்டுது…தடுமாறுறே? சொல்லுப்பா… லவ் பண்றியா?’

தலை கவிழ்ந்தபடியே… ‘ம்’ எனத் தலையாட்டினான்!

‘என் கண்டிப்பாலயும் வழிகாட்டுதலாலயும் நீ சரியா வளர்ந்திருக்கே. நல்லது கெட்டதைப் புரிஞ்சிருக்கே. இனி உன் வாழ்க்கை விஷயத்துல நீதான்டா முடிவெடுக்கணும். இனி அப்பாகிட்ட பயப்படாம தோழனாயிரு. உன் முடிவு சரியாயிருக்கும்ங்கற நம்பிக்கையில நான் சம்மதிக்கறேன்’ என்றார் அப்பா.

தந்தையைக் கட்டியணைத்து நன்றி சொன்னான் நிர்மல்.

நன்றி : சிறுகதைகள்
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்