தேர்தல் 2024
எனக்குள் தேடல்
மாற்றம் என்று
எது மாறப் போகிறது.
சனாதிபதி தேர்தல்
நடந்து முடிந்தது.
மாற்றம் வந்த முறை
ஆச்சரியம் மாறாதது.
கோத்தபாயவும் இவரும்
வந்த முறை ஒன்றே!
புரியாத தமிழர் தான்
ஆதரிக்கிறார் மாற்றம்.
நாளை அப்படியே
தமிழர் பிரச்சினை
மாறாது தொடரும்.
ஏமாற்றம் மிச்சமே!
அடிமட்ட சிங்களவர்
மாறாத வரை இங்கே
இலங்கையில் மாறாது
இனப்பிரச்சினை மட்டும்.
தமிழருக்கு இது விடுத்து
வேறு எது வேண்டுமோ?
ஊழலற்ற தேசம் அது
கனவன்றி வேறாகாது.
கட்சி மாறிய ஆட்சி
மக்கள் தேடிய மாற்றம்
வெற்றிக்கு வழியது
வென்றது மட்டும் நடந்தது.
நீண்ட போர் முடிந்து
தீர்வுகள் வருமென்று
காத்திருப்பு நீள்கிறது.
ஈழத்தமிழர் வாழ்வில்.
பொய்யுரைத்து ஏமாற்றி
தாம் வாழும் வழி தேடி
வாழ்ந்து விட்டுப் போகும்
அரசியல் அணுகல் மாறாது.
அப்படி மாறி விட்டால்
பௌத்த சிங்கள நாடு
இலங்கை என்பது மாறும்.
நடந்திடக் கூடுமோ இது.
அரசியல்வாதியும் ஊழல்
அரசு அதிகாரியும் ஊழல்
பொது மக்கள் அவர்கள்
உறவுகளன்றி வேறாரோ?
தன் வீட்டு அதிகாரியை
மாற்ற முடியாத போது
வீதிக்கு இறங்கி வந்து
போராட்டம் ஏனிங்கு?
தேர்தல் வந்து போகும்
தேர்வில் என்ன கிடைக்கும்.
ஒவ்வொரு தேர்தலும்
மாற்றம் தந்தது உண்மை.
நாட்டில் எதுவும் மாறாது
நீண்டு வந்ததும் கண்டு
மனங்கள் மட்டு மாறாது
மீண்டும் எதிர் பார்க்கிறது.
ஏமாந்து வாழப் பழகிய
ஈழத்தமிழர் மட்டும்
கொஞ்சம் மாற வேண்டும்.
மாற்றம் நிகழும் படி.
உறுதி மாறாத மனம்
கொண்டிங்கு நடந்திட
திடம் வேண்டும் என்றும்.
மகிழ்ந்து மரணிக்கலாம்.
இளையவர் தேட வேண்டும்
அரசியல் அறிவை தான்.
தம்மிடம் வளர்க்க வேண்டும்.
தந்திரம் கொண்டு வென்றிட.
வீரம் என்பது புரிதல்
உடல் நலமோடு அறிவும்.
இலக்கத்தை வென்றிட
தேர்தல் மாற்றம் போதாது.
பிராபா சாயம் பூசி
வாழும் மனிதர் அறியும்
பிராபா போல வாழ
இறைவனும் அஞ்சுவான்.
கரும்பூக்கள் மலர்ந்த
மனது அவரது பாரும்.
மேடை வந்து பேசாதீர்
அவர் போல் நீரும் என்று.
ஈழத்தமிழர் இது கண்டு
உணர்ச்சி பொங்கிட கூடாது.
ஆழ்ந்து சிந்தை கொண்டு
நிதானம் வழி நடந்திட வேண்டும்.
நதுநசி