புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முகமற்றவனின் பேச்சொலி | கவிதை | சு.மு.அகமது

முகமற்றவனின் பேச்சொலி | கவிதை | சு.மு.அகமது

0 minutes read

பாவனைகளும் தோரணைகளும்
எங்கோ கண்டதின் சாயலில்
வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும்
நம் நிழல் போல்

சுவர்களை மீறி வரும் ஒலி
அறையின் வெக்கையாய்
அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள்
உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல்

ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை
விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி
கனல் நீரில் தத்தளிக்கும்
துடுப்பற்ற பொத்தல் படகாய்

என் அன்னியோன்யத்தில் உலவும்
எனக்கே அல்லாத உறவின் முகம்
எப்போதுமே கதைத்திருக்கும்
தான் கரைந்ததும் கனத்ததுமாய்

கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி
செவிகளில் பதியும் போது
போதுமென்ற மனமே பொன் செய் மனமாய்
அகழ் குழியில்
தனியனாய் நானும் என் எண்ணங்களும்

 

– சு.மு.அகமது

நன்றி : கவிதை.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.