15


கடத்தல் போல்
அரிதான உயிர்ப்பு இல்லை
வெள்ளம் கழிந்தும் பயிர் உயிர்க்கிறது
இடிமுடிந்து மழை
விளிக்கிறது
நிலம் பிளந்து
விதை சிரிக்கிறது
வலி விரிந்து
குழந்தை சனிக்கிறது
கடத்தல் இப்படித்தான் ஒரு விடுதலை ஆகிறது
கடத்தல் இப்படித்தான் ஒரு வித்தை ஆகிறது
கடத்தல் இப்படித்தான் ஒரு விடை ஆகிறது
கடத்தல் போலில்லை
வாழ்வில் வானேறும் பாதை
பருவங்களைக் கடப்பது போல்
கடந்து வாழின்
உடைதலேது
மடைமை ஏது
வாழ்வு கடத்தலினால் கட்டுண்ட
வர்ணக் கூடல்லவா.
த.செல்வா
11.26