நான் ஒரு,
கொடிய போரில் இருந்து தப்பித்தேன்.
சில ஆழமான காரணங்களுக்காக,
அங்கு போர்,
வேரோடி வியாபித்திருந்தது.

மரணத்தை யாராலும் தூண்டிவிட முடியாது.
ஆனாலும் துன்பகரமான வாழ்க்கையில்
மரணங்கள் அங்கு விதைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட எல்லாமே முடிந்து போனபின்,
நரக வேதனையிலும்,
புன்னகைப்பதுபோல் பாவனை செய்தோம்.
மனிதர்கள் சிரித்திருக்கலாம்!
ஆனாலும் அவர்தம் கண்களில்,
அமைதி இல்லை.
அழுகையில் ஏதோ ஒன்று தொக்கி நின்றது.
சொல்லப்படாத உண்மை,
போரின் பின்னைய பரிதாபம்,
மற்றும், இன்னும் பல…
விசித்திரமான நண்பர் ஒருவர் சொன்னார்
“இங்கு புலம்புவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று.
அன்பு நண்ப!
இந்த இருட்டிலும்,
உன்னை நான் அறிவேன்.
நீ கொன்ற எதிரி,
நான்தான் நண்பரே!
-தியா-