செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் லங்கனாக வாழ்ந்து பார்…

லங்கனாக வாழ்ந்து பார்…

0 minutes read

பெற்றோரை விட பெற்றோலை மதிப்பாய்
டீச்சரை விட டீசலை மதிப்பாய்

கேஸ் விற்பவன் தெய்வமாவான்
பால்மா தருபவன் பகவான் ஆவான்

சீமெந்தெல்லாம் சீதனமாகும்
சீனி கூட நூதனமாகும்

வாழ்க்கையில் கொஞ்சமும் கலரிருக்காது
உன் நாட்டில் ஒன்றேனும் டொலரிருக்காது

லங்கனாக வாழ்ந்து பார்…

உண்ண உணவிருக்காது உக்ரைனுக்காக உருகுவாய்

பிறகு கடனாலும், அடகாலும் மீள முடியாமல் இறுகுவாய்

அடுத்தவேளை வயிறு செல்லும் பட்டினிக்கு – ஆனால் FB யில் அறிவுரை சொல்வாய் புட்டினுக்கு

உரமில்லாமல் நிலமெல்லாம் வரண்டு போகும்
கண்ட கண்ட நேரமெல்லாம் கரண்டு போகும்

மொத்தத்தில்

நரகத்தின் பகுதியெல்லாம் View ஆகும்
ஆங்கிலத்தில் பிடிக்காதது Q ஆகும்

லங்கனாக வாழ்ந்து பார்…

நன்றி – பேஸ்புக்

எழுதியவரின் பெயர் அறியப்படாத இந்தப் பதிவு தற்போதைய இலங்கை பொருளாதார நெருக்கடிச் சூழலில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. நன்றியுடன் இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.