Sunday, October 17, 2021

இதையும் படிங்க

தினமும் வெறும் வயிற்றில் மிளகு நீர் பருகினால் இவ்வளவு நன்மைகளா?

உங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது...

பெண்கள் கழுத்தில் அணியும் நகைகளும்… கிடைக்கும் பலன்களும்…

பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது. கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும்...

சிரித்தால் தீரும் நோய்கள்!

சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.

உடலை சீராக்கும் உடற்பயிற்சி!

உடற்பயிற்சி என்பது மனித உடலில் பல்வேறு பாகங்களை சீராக இயங்க வைக்க உதவும் சக்தியாகும். முக்கியமாக தசைகளை வலுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கை, கால், மார்பு, வயிறு, கழுத்து...

சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்

தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்!

டிஜிட்டல் கலாசாரத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதால் உடல் எடை அதிகரித்தல் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்....

ஆசிரியர்

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம், யோசிக்கிறோம். வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்து அபரிமிதமாக இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே.

ஆரம்பத்தில் சொன்ன புடவைக்கும் வைட்டமின் ‘டி’க்கும் என்ன சம்பந்தம்… விளக்குகிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்…

“வைட்டமின் ‘டி’ சத்து கிடைப்பதற்கு மிகவும் எளிய வழி சூரிய ஒளிதான். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வைட்டமின் ‘டி’ மாத்திரைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. கை, கால், கழுத்து, வயிறு என நம் உடலின் எந்தப் பகுதியில் சூரிய ஒளி பட்டாலும் அந்த இடத்தின் சருமத்தில் உள்ள கொழுப்பு, வைட்டமின் ‘டி’யாக மாறி உடலுக்கு நன்மை செய்கிறது.

பெண்களுக்கு வைட்டமின் ‘டி’யைப் பெறுவதற்கு எளிய வழி புடவை கட்டுவதுதான். புடவை கட்டுபவர்கள் வைட்டமின் `டி’யை சூரிய ஒளியிலிருந்து சுலபமாகப் பெறலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதி அதிக அளவு சூரிய ஒளியைக் கிரகித்துக்கொள்ளும். அதனால்தான் நமது பாரம்பர்யத்தில் கர்ப்பிணிகளைப் புடவை கட்டுவதற்கு பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் சூரிய ஒளி வயிற்றில்படும்போது தாய்க்கு மட்டுமல்ல… கருவிலிருக்கும் குழந்தைக்கும் வைட்டமின் ‘டி’ கிடைக்கும்.

காலையில் 6 முதல் 9 மணி, மாலை 3 முதல் 5 மணி வரை வைட்டமின் `டி’ சத்தை சூரிய ஒளியிடமிருந்து பெறுவதற்கு சிறந்த நேரம். இந்த நேரத்தில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, மொட்டை மாடியில் சூரிய ஒளிபடும்படி உட்காருதல், உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றைச் செய்யலாம். மொட்டை மாடியில் பிரைவசி இருந்தால் கால் மூட்டு, வயிறு ஆகிய பகுதிகளில் ஆடையைச் சற்று விலக்கிவிட்டு 10-15 நிமிடங்கள் சூரிய ஒளிபடும்படி அமர்வது கூடுதல் பயனளிக்கும்.

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!
முட்டை, காளான், மீன் உள்ளிட்ட உணவுகளிலிருந்தும் வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்கும். வைட்டமின் ‘டி’ உடலில் போதுமான அளவு இருந்தால்தான் கால்சியம் சத்தையும் உடல் கிரகிக்கும். கால்சியம் சத்து சரியான அளவிலிருந்தால் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் பெருந்தொற்றுக் காலத்தில் எவ்வித தொற்றும் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.”

ஆக, பெண்களே புடவை கட்டுங்க. வைட்டமின் `டி’யை அள்ளுங்க!

இதையும் படிங்க

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்

குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

வயதானவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த முத்திரை!

செய்முறைநமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு...

உங்க குழந்தை உயரமாக வளர உதவும் பயிற்சிகள் என்னென்ன தெரியுமா?

பொதுவாக நிறைய குழந்தைகளின் உயரம் தற்போது குறைவாகவே இருக்கிறது. இது குட்டை, நடுத்தர அல்லது உயரமாக இருப்பது முற்றிலும் நன்றாக இருந்தாலும், உங்கள்...

மூளையின் சக்தியை அதிகரிக்கும் சி முத்திரை!

செய்முறை:நாம் உட்கார்ந்து கொண்டு இந்த முத்திரை பயிற்சியை செய்யவேண்டும். நம்து இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சிறுவிரலின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலைஸ் சுற்றி மற்ற நான்கு...

குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகள்!

குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்....

முதுகு வலியில் இருந்து மீள..

முதுகுவலியில் அவதிப்படுபவர்கள் அந்த வலியில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை பின்பற்றினால் போதும். முதுகு வலி வராமல் தடுக்கலாம்.

தொடர்புச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்று கேதார கௌரி விரத ஆரம்பம்.

சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம்,...

நல்ல அழகான உடலையும் சருமத்தையும் பெற நீங்க எந்த உணவுகள சாப்பிடணும் தெரியுமா?

இன்றைய உணவு பொருட்கள் பெரும்பாலும் இரசாயணங்கள், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட உணவு பொருட்களாக இருக்கின்றன. இதனால், உடல் நலத்திற்கு...

குபேரரின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பாய வேண்டுமா!

பூஜைகள் வேண்டாம், பரிகாரங்கள் வேண்டாம். மந்திரங்கள் வேண்டாம். பணம் காசை நம் பக்கம் ஈர்க்க இந்த ஒரு வேலையை நாம் செய்தாலே போதும்....

மேலும் பதிவுகள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்

குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பொரி

பொரியை அப்படியே சாப்பிடாமல் அதில் மசாலா சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்

இன்று கேதார கௌரி விரத ஆரம்பம்.

சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம்,...

ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா!

யாருக்கு தான் அழகான, பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்காது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க நம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் பல அழகு...

குழந்தைகளுக்கு விருப்பமான சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ்

உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து...

உங்களின் கனவுகள் நினைவாக வேண்டுமா?

யாராவது ஒருவரிடம் உனது ஆசை என்னவென்று கேட்டால் பலரின் பதில் தனக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதுதாக தான் இருக்கும்....

பிந்திய செய்திகள்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

துயர் பகிர்வு