செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் காலிபிளவரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது..?

காலிபிளவரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது..?

1 minutes read

பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவு பட்டியலில் காலிபிளவரும் ஒன்றாக இருக்கும். அதில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா….?

காலிபிளவர் ஒரு பூ வகையாகும். அதிகமாக வெண்மை நிறம் கொண்ட இது, கண்ணைக் கவரும் பல வண்ணங்களில்கூட உற்பத்தியாகிறது என்பது அறிவியல் நவீனத்தின் சாதனையாகும். காலிபிளவர் கலோரி குறைந்த உணவுப் பண்டம். கொழுப்புகள் இல்லை என்பதும் போனஸ்.

100 கிராம் காலிபிளவரில் 42.5 மில்லிகிராம் `வைட்டமின் சி’ இருக்கிறது. இது உடலில் அத்தியாவசியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்துப்பொருள். இன்டோல் 3 கார்பினோர், சல்பராபேன் போன்ற அரிய சத்துக்கள் இதில் அடங்கி உள்ளது. இவை ஆண், பெண் உயிரணு மற்றும் கருவியல் சார்ந்த தேவைகளுக்கு அத்தியாவசியமானவை. மேலும் புற்றுநோய்க்கு எதிரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர வைட்டமின்கள் பி5, பி6, பி1, தாது உப்புக்களான மக்னீசியம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் என எண்ணிலடங்கா அத்தியாவசிய சத்துக்களும் காலிபிளவரில் அடங்கி இருக்கின்றன.

காலி பிளவரில் சாம்பார், பொறியல், குருமா என கறி வகைகள் செய்து சாப்பிடலாம். பக்கோடா செய்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.