செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

குழந்தைக்கு பற்சிதைவு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

1 minutes read

குழந்தைகளுக்கு ஏதேனும் காரணத்தினால் பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும்.

பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது! குழந்தைகளை பொறுத்தவரை, பற்களை சரியாக விலக்கினால், பற்சிதைவை தவிர்க்கலாம். ஏதேனும் காரணத்தினால் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை பற்சிதைவினால் அவதிப்படுகிறது என்பதை அறிய சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.
  2. பல் தொற்றின் ஆரம்ப நலை வாய் துர்நாற்றம் உங்கள் குழந்தைக்கு வாயில் துர்நாற்றம் அடித்தால் அவரது வாயில் தொற்று இருக்க நிறைய வாய்புண்டு. அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
  3. உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.
  4. நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்புபுள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.
  5. உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.