செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடல் ஹார்மோன் அளவை சீராக்கும் வாழைப்பழ டீ

உடல் ஹார்மோன் அளவை சீராக்கும் வாழைப்பழ டீ

1 minutes read

மா, பலா, வாழை எனப்படும் முக்கனிகளில் வாழை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் இருந்து கிடைக்கப் பெறும் பயன்கள் சொல்லில் அடங்காது. அத்தகைய வாழையில் இருந்து நாம் அறியாத ஒன்று வாழைப்பழ டீ.

இந்த வாழைப்பழ டீயில் விட்டமின் பி6,விட்டமின் பி12, விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளீட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த டீயை எப்படி தயாரிப்பது, அதில் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கே காணலாம்.

வாழைப்பழ டீயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துகிறது. தமனிகள், ரத்த நாளங்களின் அழுத்தத்தை குறைத்து இதயப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தூக்கமின்மைக்கு தீர்வாக அமையும். இந்த டீயில் இருக்கும் டிரிப்டோபான், செரோடோன், டோபமைன் சத்துக்கள் தூக்க அளவை அதிகரிக்கிறது. இதன்மூலம் இன்சொமேனியா, அல்சைமர் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

உடல் ஹார்மோன் அளவை சீராக்குகிறது. மனச்சோர்வு நீக்க புத்துணர்ச்சி அளிக்கிறது. எலும்புகள் இரும்பாக வாழைப்பழ டீ உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் ஆகியவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். எலும்புகளில் ஏற்படும் ஆஸ்டாபோரோசிஸ் நோயைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. கண்புரை வளர்ச்சியை தடுத்து, விழித்திரை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நன்றி:ஆரோக்கியமான வாழ்வு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.