செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கவலை-கழுத்து வலி நீங்க தியானம்

கவலை-கழுத்து வலி நீங்க தியானம்

1 minutes read

கவலை ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ தியானம் அவசியம் பயில வேண்டும்.

கவலையும் கழுத்து வலியும்: பொதுவாக கவலை அதிகம்பட்டால் நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும். அதனால் கழுத்துவலி வரும். எனவே நாம் வாழ்வில் கவலை இன்றி வாழ கற்றுக் கொள்ள வேண்டும். கவலை ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ தியானம் அவசியம் பயில வேண்டும்.

கவலை – கழுத்து வலி நீங்க தியானம்: விரிப்பில் நிமிர்ந்து அமரவும், கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை இணைக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும்.

உங்களது மனதை தலை வெளி தசைகளில் நிலைநிறுத்தவும். அதில் உள்ள எல்லா அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்து விட்டோம். அந்த தசைகளில் எந்த ஒரு டென்‌ஷனும் இல்லை என்று மனதால் எண்ணி தியானிக்கவும்.

பின் உங்கள் மனதை தோள்பட்டை வெளி தசைகளில் நிலை நிறுத்தி அந்த தசைகளில் எந்த ஒரு டென்‌ஷனும் இல்லை என்று மனதால் தளர்த்தவும். பின் வலது கை, இடது கை வெளி தசைகளில் இதயத்தின் வெளி தசைகள், வயிற்று வெளி தசைகள், வலது, இடது கால் வெளி தசைகள்என ஒவ்வொரு பகுதியிலும் மனதை நிலை நிறுத்தி அந்த தசைகளில் உள்ள அழுத்தத்தை மனதால் தளர்த்தவும்.

பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணனை உள் இழுப்பதாக எண்ணவும். மூச்சு வெளிவிடும் பொழுது நமது, உடல், மனதில் உள்ள டென்‌ஷன், மன அழுத்தம் நீங்குவதாக எண்ணவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் நிலை நிறுத்தி அந்த இடத்தில் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஐந்து நிமிடம் தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

இந்த தியானத்தை காலை மாலை பத்து நிமிடம் பயிற்சி செய்யுங்கள். கவலைகள் நீங்கும். அதனால் நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். இதயத்துடிப்பு சீராகும். கழுத்து வலி காணாமலே போய்விடும். கவலை அதிகமானால், நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும். அதனால் கழுத்து வலி வரும். இந்த தியானம் கழுத்து வலி வராமல் தடுக்கும். நுரையீரல் இயக்கமும் நன்றாக இருக்கும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.