மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கும்போது, மூளை, வேதியியல் மற்றும் இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
அதனால் அதன் ஒட்டுமொத்த செயல்பாடு பாதிப்படைகிறது.
அதிக அழுத்தம் உள்ள நேரங்களில், மூளைக்குள் சில வேதிப்பொருட்கள், டோபமைன்,
எபினெஃப்ரைன் மற்றும் நாரெபினெஃப்ரைன் போன்ற நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் உட்பட பலவும் அதிகரிக்கத் தொடங்கும்,
அதனால் இவையும் அட்ரினலின் போன்ற ”போராடு அல்லது தப்பி” எதிர்வினையைத் தூண்டும் ஹார்மோன்களும் அதிகரிக்கும். இந்த வேதிப்பொருட்கள் குறிப்பிடத்தக்க உடலியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
அதில் வேகமான இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் பலவீனமடையும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவையும் அடங்கும். இதை நீண்ட காலத்திற்கு சரிசெய்யாமல் விட்டுவிட்டால்,
நாள்பட்ட அழுத்தம் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும், அதில் வயிற்றுப்புண்கள், வாதம், ஆஸ்த்மா மற்றும் இதய நோய்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.