செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சத்து நிறைந்த அவரை

சத்து நிறைந்த அவரை

1 minutes read

அவரைக்காய் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது.

அவரைக்காயில் கால்சியம் சத்து கணிசமான அளவில் உள்ளது. இது நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அவரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அவரைக்காயில் இரும்புச்சத்து உள்ளது. இது நம் உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எனவே அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அவரைக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அவரைக்காயில் புரதச்சத்து வளமான அளவில் உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடை குறைந்து விடுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், இவை நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

நன்றி வெபுமின்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.