இங்கிலாந்து ராணி உபயோகித்த கார் ஏலம் போனது இங்கிலாந்து ராணி உபயோகித்த கார் ஏலம் போனது

இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் 40,500 பவுண்டிற்கு விற்கப்பட்டுள்ளது. டைம்லர் சூப்பர் வி8 எல்டபிள்யுபி என்ற இந்தக் காரினை கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ராணியார் தனது உபயோகத்திற்காக வைத்திருந்தார். 11,000 மைல்கள் ஓட்டியபின்னர், ஜாகுவார் டைம்லர் பாரம்பரிய அறக்கட்டளைக்கு இந்தக் கார் அளிக்கப்பட்டது.

ராணி உபயோகித்த இந்தக் காரில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் காரின் சீட்டுகளுக்கு நடுவில் ராணியின் கைப்பையை வைப்பதற்காகவே நடுவில் இருந்த கைப்பகுதியில் சிறப்பு அமைப்பு ஒன்றும் இருந்தது. ராணி அரண்மனையை நெருங்கும்போது, அவரது வருகையை அறிவிக்கும்விதமாக பின்புற பார்வைக் கண்ணாடி அருகில் நீல நிற நியான் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. நான்கு லிட்டர் என்ஜினுடன் கூடிய இந்தக் கார் நல்ல நிலையில் பூர்வீக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பருடனும், அசலான பத்திரங்களுடனும், ராணி அந்தக் காரை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படத்துடனும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பு மட்டும் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரினை வாங்கிய இயன் லில்லிகிராப் இதன் அருமையான நிலையைக் கண்டு அசந்துபோனதாகவும், இந்தக் காரை வாங்கியதன்மூலம் வரலாற்றில் கொஞ்சம் வாங்கியதுபோல உணருவதாகவும் கூறினார்.

ஆசிரியர்